திருமங்கலம் முனியாண்டி கோயிலில் அசைவ அன்னதானம்

திருமங்கலம், பிப். 12:  திருமங்கலம் சோழவந்தான் ரோடு மொக்கையன் அம்பலம் நகரில் முனியாண்டி கோயில் அமைந்துள்ளது. இங்கு நேற்று தை அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திகடனாக செலுத்திய 11 கிடாக்களை பலியிடப்பட்டன. தொடர்ந்து அசைவ அன்னதானம் நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்கள் சமமாக தரையில் அமர்ந்து உணவருந்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: