தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது: பொன்குமார் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட்ட நாளே மே தினமாக மே ஒன்றாம் நாளை உலகம் கொண்டாடி வருகிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 வகையான அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்களை கலைஞர் அமைத்துக் கொடுத்து, பல்வேறு நலத்திட்டங்களுடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஏற்பாடாகும்.

தற்போதைய ஒன்றிய மோடி அரசு ஆங்கிலேயன் காலத்திலிருந்து தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு – முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு கோடுகளை கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிற பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நாளில் தொழிலாளர்கள் மிகுந்த விழிப்போடு இருந்து சாதி, மத, அரசியல், பேதங்களை கடந்து தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதற்கான உறுதியினை இந்த மே தினத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: