ஒட்டன்சத்திரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

ஒட்டன்சத்திரம், மார்ச் 16: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று வெளியானது. இதையொட்டி மக்களாட்சியை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் செல்கின்றனர்.

இதன்படி ஒட்டன்சத்திரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்றடைந்தது. இதில் டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: