திருவாரூர், மார்ச் 16: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் கிராமம் மணல்மேட்டு தெருவில் வசித்து வருபவர் கருணாகரன் மகன் பிரபாகரன் (35). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (21). பிரபாகரன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் திவ்யா, அவரது தயார் லட்சுமி (48) ஆகியோரை பிரபாகரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
