நாகை மாவட்ட இளைஞர்கள் ராணுவ பணியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

நாகப்பட்டினம், மார்ச் 16: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் பணியில் சேர ஏப்ரல் 1ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு general duty, technical duty, clerk, store keeperஉள்ளிட்ட பணிகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

17 வயது முதல் 22 வயது வரை உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வரும் 1ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் காணலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: