ஆனான்விளை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.67.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ராஜேஷ்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கருங்கல், மார்ச் 14: கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள கீழ்குளம் மேற்கு (ஆனான்விளை) அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், பெற்றோர், பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏயிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து ரூ.67.15 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று தந்தார். இந்நிலையில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை ராஜேஷ்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், மாநில நிர்வாகி ஜார்ஜ் ராபின்சன், பேரூராட்சி உறுப்பினர்கள் அனிதா ராஜகிளன், எமில் ஜெபசிங், மார்க்ரெட், நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜேஷ், வசந்தி, தலைமை ஆசிரியர் ஹெலன் மேரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: