துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

பென்னாகரம், மார்ச் 14: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். பென்னாகரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பை பென்னாகரம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபு, சுரேஷ்குமார், எஸ்ஐக்கள், போலீசார் மற்றும் துணை ராணுவ படை கமாண்டோ குமார் சௌரவ் தலைமையில், 50 துணை ராணுவத்தினர், 60 போலீசார் கலந்து கொண்டனர். பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

Related Stories: