சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சாத்தான்குளம், மார்ச் 13: சாத்தான்குளத்தில் புதிய இன்ஸ்பெக்டராக ஸ்டீபன் ஜோஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சாத்தான்குளத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஸ்டீபன், ராஜாங்கமங்கலம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு எஸ்ஐ மற்றும் போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: