வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகளால் வாழை, தென்னை நாசம்

வத்திராயிருப்பு, பிப். 11: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோடங்களில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. நீர் தேடி மலைப்பகுதியில் இருந்து இறங்கும் யானைகள் விவசாயத்தை அழித்து வருகின்றன. இந்த நிலையில், பிளவக்கல் அணைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜெயக்கொடி, சுந்தரம் ஆகியோர் 3 ஏக்கரில் வாழை விவசாயம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக வனத்துறையினர் ரோந்து சுற்றுவதில்லை.எனவே, பாதிக்கப்பட்ட தோட்டங்கங்களை வனத்துறையினர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகளை விரட்டுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: