அம்பை அருகே சிறுவர்கள் மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

அம்பை, மார்ச் 12: அம்பை அருகே சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டியதில் ஒருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவிலைச் சேர்ந்த 11ம் வகுப்புப் படித்து வரும் சிறுவர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது ஒரு சிறுவன் அரிவாளால் மற்றொரு சிறுவனை வெட்டியதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக வெட்டுப்பட்ட சிறுவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த அம்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: