வைகுண்டம், மார்ச் 12: ஆழ்வார்திருநகரி காந்திநகரில் புதிய அங்கன்வாடி கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி காந்திநகரில் பழுதான அங்கன்வாடிக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊர்வசிஅமிர்தராஜ் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி தலைமை வகித்தார். செயல் அலுவலர் காயத்ரி முன்னிலை வகித்தார். விழாவில் ஆழ்வை வட்டார காங். தலைவர் கோதண்டராமன், மாவட்ட மகளிரணி மாரியம்மாள், அமைப்புசாரா பிரிவு தலைவர் முருகன், கவுன்சிலர் மணிமுருகன், ஒன்றிய விடுதலைசிறுத்தைகள் பொறுப்பாளர் மதன், நகர காங். துணை தலைவர் கண்ணன், பொறுப்பாளர் அபுதாகிர், கிராம கமிட்டி நிர்வாகிகள் சுப்பையா, குணசேகரன், செம்பூர் காளிரத்னம், கவுன்சிலர்கள் பிரேம்நாத், ராஜலெட்சுமி, வேதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
