காரைக்கால், மார்ச்11: காரை க்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நாஜிம் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காரைக்கால் முதன்மை கல்வி அலுவலர் விஜயமோகனா கலந்து கொண்டனர்.இந்நிகழ்சியில் சமூக சேவை, கல்வி, மருத்துவம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 30 தகுதியான பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
