உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம்

 

தேவகோட்டை, மார்ச் 11: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் பனிமய மாதா திருத்தல அருள்பணி சுவக்கீன் கலந்து கொண்டு சிறப்புச் செய்தி கொடுத்தார். இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, குணமளிக்கும் வழிபாடு, தவக்கால திருப்பலி ஆகியவை நடைபெற்றது. இத்தியானத்தில் திருத்தொண்டர் மிக்கேல் ராஜ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: