அரியலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு

அரியலூர், பிப்.11: அரியலூர் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் சம்பா சாகுபடி பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மேலவரப்பன்குறிச்சி, வெங்கனூர் கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், உடையார்பாளையம் வட்டம், தென்னவநல்லூர், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், அருண்மொழி, கோவிந்தபுத்தூர் கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இன்று (11ம் தேதி) முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மேலவரப்பன்குறிச்சி, வெங்கனூர், தென்னவநல்லூர், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், அருண்மொழி மற்றும் கோவிந்தபுத்தூர் கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (11ம் தேதி) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே, அருகில் உள்ள விவசாய பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories: