தென்காசி,மார்ச் 11: ஆய்க்குடி அகரக்கட்டில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் நியமன கடிதம் வழங்கி பேசினார். கூட்டத்தில் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் சமூக விரோதிகளால் வெட்டுப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் ராஜ் நயினார், குருசாமி, மணிகண்டன் பலர் கலந்து கொண்டனர்.
நாடார் உறவின்முறை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- நாடார் உறவினர் கூட்டமைப்பு
- தென்காசி
- தமிழ்நாடு நாடார் உறவினர் கூட்டமைப்பு
- ஆய்க்குடி அகரகட்டு
- பொதுச்செயலர்
- கணேசன்
- பொருளாளர்
- சுப்பிரமணியன்
- அகரகட்டு லூர்து…
