கழுகுமலை, மார்ச் 11: கழுகுமலையில் திமுக நகர இளைஞரணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வாழ வேண்டி இளைஞரணியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் மேல வாசல் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னதானத்தை கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவரும், திமுக கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளருமான சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். திமுக நகர இளைஞரணி செயலாளர் அருணாசலம், முக்குலத்தோர் புலிப்படை ஒன்றிய செயலாளர் காளிராஜ், வார்டு கவுன்சிலர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி ராமச்சந்திரபிரபு, இளைஞரணி சார்பில் சரவணாபுரம் செல்வம், கழுகுமலை வெங்கட், லட்சுமணகுமார், கார்த்திக், விக்னேஷ் குமார், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
