×

உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது: ஜூன் 11-ஜூலை 19 வரை நடைபெறும்

 

வாஷிங்டன்: 23வது பிபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டிகளை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இந்தாண்டு நடத்துகின்றன. இந்த போட்டிகளுக்கான அட்டவணை நேற்று வெளியானது. அதன்படி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 11ம் தேதி துவங்கி ஜூலை 19ம் தேதி வரை, 16 நகரங்களில் நடைபெற உள்ளன. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறை அதிக எண்ணிக்கையாக, 48 அணிகள் 104 போட்டிகளில் மோதவுள்ளன. முதல் போட்டி, மெக்சிகோவில் அஸ்டெகா ஸ்டேடியத்தில் வரும் ஜூன் 11ம் தேதி, மெக்சிகோ – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே நடைபெறுகிறது.

இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் ஜூலை 19ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் ஸ்டேஜ் போட்டிகள், ஜூன் 11ல் துவங்கி ஜூன் 27ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன் பின், ரவுண்ட் ஆப் 32 போட்டிகள் ஜூன் 29ல் துவங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும். காலிறுதிப் போட்டிகள் ஜூலை 4 முதல் 6ம் வரை நடைபெற உள்ளன. அரையிறுதிப் போட்டி ஜூலை 9 மற்றும் 11ம் தேதி அரங்கேறும்.

Tags : World Cup ,Washington ,23rd FIFA World Cup 2026 football matches ,United States ,Canada ,Mexico ,
× RELATED ஐபிஎல் 2026 போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கும்: பிசிசிஐ அறிவிப்பு