மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி

பழநி, மார்ச் 9: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் குறித்த பயிற்சி நடந்தது. இதில் அவார்டு அறக்கட்டளை பகல் நேர காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 6, 7, 8ம் வகுப்புகளில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சிகளும், கைவேலை, அழகு சாதனம் மற்றும் வீடுகளுக்கான கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை தயாரித்தல் குறித்து கற்றுத்தரப்பட்டது. இவற்றில் சிறப்பாக செயல்பட்ட குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

Related Stories: