தர்மபுரி, மார்ச் 9: தர்மபுரியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட மகளிர் துணை குழ அமைப்பாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்றார். மாவட்ட தலைவர் சுருளிநாதன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி சுகந்தி பாஸ்கர் ஆகியோர் மகளிர் தின கருத்துரை வழங்கினர். மகளிர் தின விழாவில், எம்ஆர்பி செவிலியர்கள் கலந்துகொண்டு, போராட்டம் வெற்றிபெற முன்னின்ற அரசு ஊழியர் சங்க தலைவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் உறுதிமிக்க போராட்டம் நடத்தி வெற்றிகண்ட செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மகளிர் தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் தேவகி நன்றி கூறினார்.
