ஈரான்- இஸ்ரேல் போரால் ஏற்றுமதி நிறுத்தம் நாமக்கல்லில் 5 கோடி முட்டைகள் தேக்கம்

நாமக்கல்: வளைகுடாவில் போர் எதிரொலியால், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 5 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

கடந்த 27ம் தேதி முதல், நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி நடைபெறவில்லை. அதற்கு முன்பு இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 3 கோடி முட்டைகள், உரிய நாடுகளை சென்று அடைய முடியாமல், கப்பல்களில் நடுக்கடல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போர் முடிந்த பிறகே முட்டை ஏற்றுமதி பழையபடி சீராகும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 30 காசுகள் குறைக்கப்பட்டது. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 430 காசாக, நிர்ணயம் செய்தது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Related Stories: