- ஒலிம்பிக் அகாடமி
- மதுரை ரேஸ்கோர்ஸ்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- மதுரை
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட்டது. இதில், தடகள ஓடுதளம், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் விளையாட்டு அரங்கம், கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் வசதிகளுடன் பல்நோக்கு விளையாட்டு உள்ளரங்கம், குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக்கூடம், செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளம், செயற்கை இழை கூடைப்பந்து ஆடுகளம் உள்ளிட்ட விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது.
நவீன நீச்சல் குளம் பணி முடியும் நிலையில் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை உருவாக்கவும், சர்வதேச அளவில் வீரர்களை உருவாக்கவும் இந்தியாவில் தமிழ்நாட்டை விளையாட்டு மையமாக மேம்படுத்தவும் இந்த ஒலிம்பிக் அகாடமி மதுரையில் துவக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒலிம்பிக் அகாடமியை திறந்து வைத்தார். கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டு அரங்க கல்வெட்டையும் திறந்து வைத்த துணை முதல்வர், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து மைதானங்களையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
