×

2வது முறையாக மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்: ஓபிஎஸ் சூளுரை

திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்அறிமுகக் கூட்டம் தேனி பழனிசெட்டிபட்டியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில்ஓபிஎஸ் பேசியதாவது: 5 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அரசின் அத்தனை திட்டங்களையும் எடுத்துச் சென்று மக்களின் திருக்கரங்களில் நேரடியாக கிடைக்க செய்த ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலம் ஆற்றிய பணிகளால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியில் 11.8 சதவீதம் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்குகிறது.வருகிற பொதுத்தேர்தலில் 2வது முறையாக மு.க.ஸ்டாலினை முதல்வராக கொண்டு வரவேண்டும்.இவ்வாறு கூறினார்.

Tags : M.K. Stalin ,Chief Minister ,OPS ,Soolurai ,DMK ,Theni Palanisettipatti ,DMK government ,Tamil Nadu ,
× RELATED எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன்...