சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சி இதுவரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தனது கட்சி நிர்வாகிகளுடன் கோவை குனியமுத்தூர் இல்லத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அவர்களிடம் ரகசிய காப்பு உறுதிமொழி படிவம் கொடுக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. படிவம் பூர்த்தி செய்து கையெழுத்து பெறப்பட்ட பின்னர் ஆலோசனை கூட்டம் துவங்கியது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை கிருஷ்ணசாமி இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
