சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ‘பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்’ என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
செஞ்சாரு: கனவுகளைச் சுமந்து கொண்டு கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் படையெடுக்கும் பெண்களுக்கு, எப்போதுமே பெரும் கவலையாக இருப்பது பாதுகாப்பான தங்குமிடம். அந்தப் பயத்தைப் போக்கி, அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்விடத்தை வழங்குவதற்காகத் தமிழக அரசு உருவாக்கிய உன்னதத் திட்டமே ‘தோழி’ விடுதிகள். ‘பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு ஒரு வீடு உண்டு’ என்பதை இத்திட்டம் பறைசாற்றுகிறது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில், 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இத்திட்டம் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் மூலம் இவை நவீனமயமாக்கப்பட்டன. பழைய விடுதிகளைப் புதுப்பித்தும், புதிய இடங்களைக் கண்டறிந்தும் ‘தோழி’ என்ற அழகான பெயரில் இவை மாற்றமடைந்தன.
தற்போது, தமிழகத்தில் பெண்களின் வருகை அதிகமாக உள்ள 15 முக்கிய மாவட்டங்களில் அடையார், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம் சானிடோரியம், கூடுவாஞ்சேரி, கண்டோன்மென்ட் (ஹெபர் ரோடு), புத்தூர், கோரிப்பாளையம், ஆர்.எஸ்.புரம், சூரமங்கலம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, எம்.டி.ஆர். நாயுடு தெரு, அல்லாபுரம் (தொரப்பாடி), ஓசூர் (சிப்காட் அருகே), வாழாரோட்டி, புதுப்பாளையம், தர்மபுரி நகர், துறையமங்கலம், தஞ்சாவூர் காந்தி சாலை, திருவண்ணாமலை நகர், ராணிப்பேட்டை நகர் உட்பட 19 தோழி விடுதிகள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 1,800க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விடுதிகள் மூலம் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் வெற்றியே அதன் வெளிப்படையான கட்டண முறைதான். மாவட்டங்களுக்கு ஏற்பவும், அறைகளின் வசதிக்கு ஏற்பவும் ஏசி அறை / ஏசி இல்லாத அறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஏழைப் பெண்களும் தங்கும் வகையில் இது மிகவும் குறைவானதாகவே உள்ளது.
தமிழகத்தின் உழைக்கும் பெண்களின் கரங்களை வலுப்படுத்தவும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு அரணாகவும் ‘தோழி’ விடுதிகள் உருவெடுத்துள்ளன. வெறும் தங்குமிடமாக மட்டும் இல்லாமல், பெண்களின் முன்னேற்றத்திற்குத் துணையாக நிற்கும் ஒரு உண்மையான ‘தோழி’யாகவே இந்த விடுதிகள் திகழ்கின்றன என்பதில் ஐயமில்லை.
* தனியார் விடுதிகளுக்கு நிகரான வசதிகளைத் தாண்டி, ஒரு வீட்டின் உணர்வை இவை வழங்குகின்றன
* பயோ-மெட்ரிக் (கைரேகை) நுழைவாயில் மற்றும் 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பு.
* தடையற்ற அதிவேக வைபை வசதி. இது பணிபுரியும் பெண்களுக்கு வரப்பிரசாதம்.
* நவீன சமையலறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் துணி துவைக்கும் இயந்திரங்கள்.
* காற்றோட்டமான அறைகள் மற்றும் பொதுவான ஓய்வறைகள்.
* தோழி விடுதி விரிவாக்கம்
* சென்னை: தரமணி மற்றும் சேப்பாக்கம் (புதிய நவீன விடுதிகள்).
* மேற்கு மண்டலம்: ஈரோடு, நாமக்கல், நீலகிரி.
* தெற்கு மண்டலம்: தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை.
* டெல்டா மற்றும் பிற: நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை.
* வடக்கு மண்டலம்: காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர் (அயனம்பாக்கம் விரிவாக்கம்
