மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே அரியமான் வடக்கு கடலோரப் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைபர் படகில் வந்த இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் அமல்ராஜ் (43), ராஜ்குமார் (30) ஆகிய 2 கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி மீன் பிடிக்க புறப்பட்டு வந்ததாகவும், கடலில் திசை தெரியாமல் படகு நேற்று இந்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
