×

தமிழ்நாடு வணிகர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு: வணிகவரித் துறை அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு வணிகர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து வணிகவரித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளும் ஏனையோர் மூன்று ஆண்டுகளும் செயல்படுவார்கள் என ஆணையிடப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20லிருந்து 30ஆக உயர்த்தியும் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளும் ஏனையோர் மூன்று ஆண்டுகளும் செயல்படுவார்கள் என ஆணையிடப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மேற்கூறிய அரசாணையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலத்தினை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து ஆணை வழங்குமாறு, தமிழ்நாடு வணிகவர் நல வாரியத்தின் கூடுதல் ஆணையர் அரசை கோரினார்.

பரிசீலனைக்குப் பின், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களாக செயல்பட்டு வரும் பின்வரும் 30 உறுப்பினர்களின் பதவிக்காலத்தினை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அலுவல் சாரா உறுப்பினர்களாக பதிவி நீட்டித்து வழங்க முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது. என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Mercantile Welfare Board ,Tax ,Chennai ,Commercial Tax Department ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!