- கிறிஸ்டோபர் தில
- ராஜ்ய சபா
- காங்கிரஸ்
- தில்லி
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- AIADMK...
சென்னை: காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைசெயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் களம் இறங்கவுள்ளனர். திமுக சார்பாக திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டார்கள். மேலும் கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு எல்.கே.சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு டெல்லியில் காய் நகர்த்தினர். குறிப்பாக தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அதேநேரம் டாக்டர் செல்லக்குமாருக்கு இந்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுதவிர காங்கிரஸ் மேலிடம் சிலரது பெயர்களை பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியானது. எப்படி இருந்தாலும் நேற்று காலைக்குள் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தமிழக காங்கிரசில் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில், சட்டீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று காலை வெளியிட்டார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களவை இடத்திற்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மூத்த தலைவர்கள் பலர் இந்த பதவியை பிடிக்க முட்டி மோதி வந்த நிலையில், தமிழகத்தில் அதிக அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி நடத்திய யாத்திரைகளிலும் இவர் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். கட்சியின் அடிமட்ட தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவில் இடம்பெற்றிருந்தார். தொண்டு நிறுவனங்கள் பணியாற்றியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களை நடத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காங்கிரஸ் பணிகளை செய்துள்ளார். தற்போது கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் கிறிஸ்டோபர் திலக் இடம்பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை ஒரு புதுமுகத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. அதில் சிறந்த தேர்வாக கிறிஸ்டோபர் திலக்கை முடிவு செய்துள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் கொள்கைகளை எடுத்துரைக்கும் திறன் கொண்டவர் என்பதால், டெல்லியில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க இவர் பொருத்தமானவர் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
இளைஞருக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கும் அது உதவும் என்றும், காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது. அந்தவகையில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கிறிஸ்டோபார் திலக் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
