கொடைரோடு அருகே விவசாயி தற்கொலை

நிலக்கோட்டை, மார்ச் 4: கொடைரோடு அருகேயுள்ள முருகத்துரான்பட்டியை சேர்ந்தவர் சூசை சேசுராஜ் (46). விவசாயி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூசை சேசுராஜ் நேற்று முன்தினம் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூசை சேசுராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: