வைகுண்டத்தில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் நகைகளை மீட்டு போலீசில் ஒப்படைத்த தம்பதி

செய்துங்கநல்லூர், மார்ச் 3: வை.யில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் நகையை மீட்டு போலீசில் ஒப்படைத்த தம்பதியை டிஎஸ்பி பாராட்டினார். செய்துங்கநல்லூர் கஸ்பா வேளாளர் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (41). இவரும், இவரது மனைவி ராஜேஸ்வரியும் வைகுண்டத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது வை. புதுக்குடி ரங்கராஜன் மண்டபம் அருகே சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எஸ்ஐ ஜஸ்டஸ் விசாரணையில், நகைகள் வைகுண்டம் கீழசன்னதி தெருவை சேர்ந்த தடிவீரன் மகன் பரமசிவன் என்பவருடையது என தெரிய வந்தது. அவர் வரவழைக்கப்பட்ட நிலையில், நகைகளை டிஎஸ்பி நிரேஷ் ஒப்படைத்தார். மேலும் சாலையில் கிடந்த நகையை மீட்டு மனிதநேயத்துடன் ஒப்படைத்த முத்துப்பாண்டி – ராஜேஷ்வரி ஆகியோரின் நேர்மையை பாராட்டி கவுரவித்தார்.

Related Stories: