மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மதுரை, மார்ச் 2: மதுரை காமராஜர்புரம் வைத்தியநாதபுரம் தெருவை சேர்ந்தவர் ஆன்ட்ரூஸ் பால்ராஜ்(48). வியாபாரியான இவர் வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதை தலைக்கேறி தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கீரைத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: