திருத்துறைப்பூண்டி,மார்ச் 2: திருத்துறைப்பூண்டியில் புதிய தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தாராக பணியாற்றி வந்த பரமேஸ்வரி, திருத்துறைப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த செந்தில்குமார் திருத்துறைப்பூண்டி தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார்.
