தஞ்சாவூர், மார்ச் 2: சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை 3ம்தேதி தஞ்சாவூர் பெரிய கோயிலில் காலை முதல் இரவு வரை நடை சாத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 3ம்தேதி சந்திரகிரகணம் என்பதால் தஞ்சாவூர் பெரிய கோவிலில் காலை நேர பூஜைகள் முடிந்து காலை 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மாலையில் கிரகணம் முடிந்த பின்பு பரிகார பூஜைகள் செய்த பின்பு இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
