வல்லம், மார்ச் 2: சேலம் மகேந்திரபுரி சிபி தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி சுந்தரி(53). இவர் கடந்த 21ம் தேதி காலை சேலத்திலிருந்து தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் புதிய பேருந்து நிலையம் வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து ஈபி காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார்.
அங்கு தன்னுடைய கைப்பை திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 10 பவுன் செயின், 4 பவுன் நெக்லஸ் மற்றும் தோடு என மொத்தம் 14 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரி வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வல்லம் எஸ்ஐ (பொ) சபீதா தமிழஞ்சனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
