திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கப்பட்ட ஊழியர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.9: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணி புரிவதற்காக தினக்கூலி அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக 44 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது எனக்கூறி இந்த ஊழியர்களை பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் விடுவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 3 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக சிஐடியூ மருத்துவமனை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் சங்க செயலாளர் சந்திரமோகன் தலைமையிலும், தலைவர் சசிகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: