வலங்கைமான், பிப். 28: வலங்கைமான் அருகே வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கோவிந்தகுடியில் உள்ள இளைஞர்கள் நலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் நிதி ஆப்கே நிகாத் எனும் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம், மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சி அமலாக்கதுறை அலுவலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மூத்த சமுக பாதுகாப்பு அலுவலர் மாசிலாமணி, பள்ளி தாளாளர் அப்துல் லத்தீப் மற்றும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
