திருத்துறைப்பூண்டி, பிப். 28: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டு குடிநீர் குழாயை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் பைபாஸ் சாலையோரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து குடிதண்ணீர் வீணாக வெளியேறியது.
இது குறித்து பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக உடைந்த பைப் லைனை சரி செய்ய உத்தரவிட்டனர். ஊழியர்கள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
