தஞ்சையில் சாதனை படைத்த எல்ஐசி முகவர்களுக்கு விருது வழங்கும் விழா

தஞ்சாவூர், பிப்.28: தஞ்சையில் சாதனை படைத்த எல்ஐசி முகவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தஞ்சை எல்ஐசி ஜீவன் சோழா கிளையின் வளர்ச்சி அதிகாரி கே.டி.அரசு யூனிட்டில் சாதனை படைத்த முகவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தஞ்சை எல்ஐசி முதன்மை கிளை மேலாளர் விஜயநம்பிராஜ் முன்னிலை வகித்தார்.

தஞ்சை முதுநிலை கோட்ட மேலாளர் விஷ்ணுதேவ் தலைமை தாங்கி பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொண்டு சாதனை படைத்த முகவர்களுக்கு விருது மற்றும் பொன்னாடை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில், உதவி மேலாளர் முகேஷ் கண்ணா மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வளர்ச்சி அதிகாரி கே.டி.அரசு நன்றி கூறினார்.

 

Related Stories: