கும்பகோணத்தில் 11வது மாநில அளவிலான உறைவாள் வீச்சு போட்டி

கும்பகோணம், பிப்.9: கும்பகோணத்தில் நடைபெற்ற 11வது மாநில அளவிலான உறைவாள் வீச்சு போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்றவர்கள் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். கும்பகோணத்தில் 11வது மாநில அளவிலான உறைவாள் போட்டி நடைபெற்றது. எட்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் சென்னை திருவள்ளூர், நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு உறைவாள் சங்க செயலாளர் செந்தில்குமார், சங்க துணைத் தலைவர் செல்லபாண்டியன், துணைச் செயலாளர்கள் சையது முகமது பிலால், செல்வம், குமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கியும் கவுரவித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள்.

Related Stories: