×

கொல்கத்தாவில் நில அதிர்வால் பீதி

கொல்கத்தா: வங்கதேசத்தில், நேற்று மதியம் 1.30 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இந்தியா – வங்கதேச எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும் உணரப்பட்டது. கொல்கத்தாவில் கட்டிடங்கள் திடீரென குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். காலி இடத்தில் மொத்தமாக அவர்கள் தஞ்சமடைந்தனர். திடீரென குலுங்கிய பூமியால் கொல்கத்தா மக்கள் பீதியில் உள்ளனர். இதில்,10 நொடிகள் வரை அதிர்வுகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் உயிர் சேதம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kolkata ,Bangladesh ,West Bengal ,India-Bangladesh border ,Bangladesh… ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...