×

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பியூஷ் கோயலை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன் வௌியிடப்பட்டது. அதன்படி இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. அவசர, அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என சமயுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா வௌியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது.

எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களையும், கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களின் நிதி சுயாட்சியை மீட்டெடுக்க ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : US ,Farmers' Association ,Piyush Goyal ,New Delhi ,India ,Union Minister ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...