- இந்தியா
- எங்களுக்கு
- மத்திய அமைச்சர்
- பியுஷ் கோயல்
- புது தில்லி
- அமெரிக்க உச்ச நீதிமன்றம்
- அதிபர் டிரம்ப்
- டெல்லி…
புதுடெல்லி: இந்தியா உள்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்தார். அப்போது ‘‘அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மாறுமா என்று கேட்ட போது, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ஏற்படும் முன்னேற்றங்களை இந்தியா கவனித்து வருகிறது. நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவுடன் நாங்கள் இறுதி செய்து கொண்ட கூட்டு அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். சூழ்நிலைகள் மாறினால் ஒப்பந்தம் மீண்டும் மாற்றியமைக்கப்படும். ஒப்பந்தத்தின் சமநிலை இரு தரப்பிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யப்படும்’’ என்றார்.
