சாலை விபத்தில் வாலிபர் பலி

தர்மபுரி, பிப். 28: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஜீவா நகர் சந்திப்பு சாலையில், செல்பி பாலத்துக்கு இடையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடல் கிடந்தது. இதுகுறித்து விஓஏ மாது, அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எனவும், அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: