குறிஞ்சிப்பாடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

வடலூர், பிப். 27: குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னித் தமிழ்நாடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(55), கூலி தொழிலாளி. இவர் நேற்று வழக்கம்போல அன்னதானம் பேட்டை வேலைக்கு சென்று விட்டு பாலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் வழியில் பைக்கில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி, பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து சவுந்தர்ராஜன் மகன் சத்தியராஜ் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: