விருத்தாசலம், பிப். 27: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(57). இவர் தற்போது விருத்தாசலம் எம் ஆர் கே நகர் ஆலடி சாலையில் வசித்து வந்தார். மேலும் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தமங்கலம் கூட்டுறவு வங்கியில் கடந்த 30 வருடங்களாக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பொன்னேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சந்திரசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி கூட்டுறவு வங்கி ஊழியர் சாவு
- கூட்டுறவு வங்கி
- விருத்தாச்சலம்
- சந்திரசேகர்
- நரசிங்கமங்கலம்
- பெண்ணாடம்
- ஆலடி ரோடு, எம்ஆர்கே நகர், விருத்தாசலம்
- சாத்தமங்கலம் கூட்டுறவு வங்கி
