பாஜவினர் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: கொளுத்தி போட்ட நயினார்; எடப்பாடி ஷாக்

சென்னை அமைந்தகரையில் பாஜ தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பாஜ தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இங்கே இருந்து 20, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என்று நினைக்கிறேன். எல்லாரும் சிரிக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் அது நடக்கவும் போகிறது. ஊடக நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். பின்னால் ஒருவர் ஆசிர்வாதம் வாங்கி விட்டார். அண்ணன் வி.பி.துரைசாமி. அமைச்சர்களாக வருவார்கள் என்று. இறைவன் நினைத்தால் நிச்சயமாக நடக்கும்.

தேசிய ஜனநாயக கட்சியின் அத்தனை உறுப்பினர்களும், அத்தனை கட்சியை சேர்ந்தவர்களும் ஒருமித்த கருத்தோடு அது, எது என்று இல்லாமல், நமக்குள் எந்தவித பாகுபாடும் இல்லாமல், அந்த கட்சி, இந்த கட்சி என்று சொல்லாமல், இன்றில் இருந்து அனைவரும் தேசிய ஜனநாய கூட்டணி என்ற உரத்த குரலில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுப்பட்டு பாட வேண்டும். ஓயாது உழைக்க வேண்டும். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வந்து கொண்டிருக்கிறார். எடப்பாடியிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்கள் வரவில்லை. இவர்கள் வரவில்லை என்று கட்டம் கட்டி பத்திரிகையில் செய்தி போட வேண்டாம். அந்த கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்று கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், பாஜ தலைவர்கள் அடிக்கடி கூட்டணி ஆட்சி என்று கூறி வந்தனர். இது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரமாக கூட்டணி ஆட்சி பற்றி பாஜ தலைவர்கள் எதுவும் கூறாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்பதை நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது கூட்டணியில் சலசலப்பையும், அதிமுக ஆட்சிதான் என கூறி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

* எடப்பாடி கூட பண்ண மாட்டாராம்… மோடிஜிதான் பண்ணுவாராம்… எந்த கட்சியில இருக்காருன்னு மறந்துட்டாரு போல!
விழுப்புரம் அருகே சூரப்பட்டில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும். இதனை மாதம், மாதம் கேட்கக்கூடாது. பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக கல்விக்கடன் வாங்கியிருக்கிறீர்கள். டாக்டராக, இன்ஜினியராக படிக்க கடன் வாங்கினீர்கள். இந்த கடனை யாராலும் ரத்து செய்ய முடியாது. அதுபொய்யான வாக்குறுதி. யார் வாங்கினாலும் செலுத்திதான் ஆக வேண்டும். அரசாங்கமே கடன் வாங்கினாலும் திருப்பி செலுத்திதான் ஆக வேண்டும்.

ஆனால் எடப்பாடி முதலமைச்சரானால் தமிழக அரசு இந்த கல்விக்கடனை அரசே ஏற்றுக்கொண்டு வங்கிக்கு கட்டும் என்று சொல்லியிருக்கிறார். கட்ட முடியும், ஏன் எங்க கூட்டணியில் யார் இருக்கிறார்கள். இந்த நாட்டினுடைய பிரதமர் மோடிஜி எங்கக்கூட இருக்கிறார். ஜி இருக்கும்வரை ஜீபூம்பா மாதிரி எல்லாமே நடக்கும். பிரதமர் நினைத்தால் தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தையுமே செய்து கொடுக்கமுடியும். அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் கொடுக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைப்போம்.

அவர்கள் வரமுடியாது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மோடிஜி எங்கக்கூட இருக்கிறார். அப்படி வரவில்லையென்றால் அந்த ஊரில் அந்த அதிகாரி இருக்கமாட்டாார். வேற ஊருக்கு சென்றுவிடுவார். அப்படி அழைத்து கல்விக்கடனுக்கான அபராதம், வட்டியை கட்டமுடியாது என்று சொல்வோம். ஏன்? மோடிஜி எங்கக்கூட இருக்கிறார். கல்விக்கடன் அசலிலும் தள்ளுபடி பண்ணுவாங்க. பண்ண வைப்போம். ஏன்? மோடிஜி எங்கக்கூட இருக்கிறார். அதையும் 5 வருடம் தவணையாகத்தான் கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: