பப்பைன் சாறு தயாரிப்பு, சேமிப்பு முறை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்

ஜெயங்கொண்டம், பிப். 26: அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பப்பாளி காயில் இருந்து பெறப்படும் பப்பைன் சாறு ஒரு முக்கிய இயற்கை நொதிப்பொருள் என்பதை செய்முறை வடிவில் விளக்கினர். இது விவசாயம், உணவு தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருள்கள் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கு உதவுகிறது. எளிய முறையில் வீட்டிலேயே பப்பைன் சாறு தயாரிக்கலாம்.

மேலும் இதன் தயாரிப்பு முறை, சேமிப்பு முறை, விவசாய பயன்பாடு, நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், பெரம்பலூர் கல்லூரியிலிருந்து இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் தேஜஸ்வினி, தில்ஷா, கௌசல்யா, தனலெட்சுமி, தனுஷியா, ஞானாம்பிகை, ஹரிணி, ஹரிணி, இளவரசி, பவ்மிதா (திருமானூர் குழு மாணவிகள்) அனைவரும் \”பப்பைன் சாறு தயாரிக்கும் முறை யை அறிந்து பயன்படுத்தினால் விவசாயிகள் குறைந்த செலவில் இயற்கை முறையில் பயிர் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இது நவீன இயற்கை விவசாயத்திற்கு உதவும் சிறந்த தொழில்நுட்பமாகும் என்பதனை விளக்கினர்.

 

Related Stories: