கீழப்பாவூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பாவூர்சத்திரம்,பிப்.26: கீழப்பாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் எம்பியும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன், பேச்சாளர்கள் தீப்பொறி அப்பாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், காளிமுத்து மதியழகன், லட்சுமி சேகர், விவேகானந்தர், சாமிநாதன், மகளிர் அணிச் செயலாளர் இசக்கி அம்மாள், கவுன்சிலர் பவானி, கஸ்தூரி, கணேசன், வேல், செல்லச்சாமி, சுந்தர்ராஜ், வார்டு செயலாளர்கள் கோபால், வேலுச்சாமி, வேல், வேல்சாமி கருப்பையா, தங்கராஜ், கருப்பசாமி, வெட்டும் பெருமாள், ஆறுமுக நயினார், கிருஷ்ணமூர்த்தி. மணிகண்டன். நிர்வாகிகள் சுடலையண்டி, பொன்னுத்துரை, முத்து, சேகர், பிரம்மநாயகம், பெரியசாமி, ரத்தினம், மாரியப்பன், வேல்முருகன், பாலமுருகன், கிருஷ்ண பாண்டி, அருணாசலம், குமரேசன், மகேந்திரன், சாமி, சேகர், ஆறுமுகபாண்டி, காளி, சாமி, சந்தனமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

Related Stories: