பாப்பாரப்பட்டி, பிப். 26: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 10 வார்டுகளில் ரூ.1.31 கோடி மதிப்பில் பல்வேறு கான்கிரீட் சாலைகளை புதுப்பிக்கும் பணியை, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பிருந்தா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், துணை தலைவர் மல்லிகா ராஜி, தர்மபுரி மேற்கு நகர பொறுப்பாளர் கவுதம், பென்னாகரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரமணி, பாப்பாரப்பட்டி நகர பொறுப்பாளர் பிரகாஷ், சண்முகம், பாண்டியன், திருவேங்கடம், சகாதேவன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.1.31 கோடியில் கான்கிரீட் சாலை பணி
- Papparapatti
- பாப்பாரப்பட்டி பேரூராட்சி
- கிழக்கு மாவட்ட டி.எம்.கே.
- ஏ. மணி
- பூமி
- டவுன் பஞ்சாயத்து
- தலைவர்
- பிருந்தா சிட்…
