திருமங்கலம் அருகே மருதுபாண்டியர் சிலை 10 நாட்களில் திறப்பு அமைச்சர் உதயகுமார் தகவல்

திருமங்கலம், பிப். 9:  திருமங்கலம் அடுத்த சிவரக்கோட்டையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் சிலை வைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சிவரக்கோட்டையில் மதுரை விருதுநகர் நான்குவழிச்சாலையில் மருதுபாண்டியர் சிலைக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிவரக்கோட்டையில் மருதுபாண்டியருக்கு முழுஉருவ வெண்கலசிலை வைப்பதன் மூலமாக இப்பகுதி தென்தமிழகத்தின் வரலாற்று முக்கிய சின்னமாக திகழும். 10 நாள்களில் சிலை திறப்புவிழா நடைபெறும். கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் 100 வது ஆண்டு நினைவு நாளில் பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. விரைவில் அதற்கான பூமிபூஜை நடைபெறும். இதேபோல் உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை, வலையங்குளத்தில் முத்திரையர் சிலை மற்றும் திருமலைநாயக்கருக்கு சிலை அமைக்கப்படவுள்ளது’ என்றார். இதல் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், சக்திவேலு அவை தலைவர் அய்யப்பன், அகில் இந்திய மருதுபாண்டியர் பேரவை தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: