நெல்லை, பிப். 24: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம் பெல் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை நெல்லை மாவட்டம் வழியாக செல்கிறார். முதல்வருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பணகுடி நான்கு வழிச்சாலை (நெறிஞ்சி காலனி) மெயின் ரோட்டில் வைத்து இன்று (24ம் தேதி) காலை 10.30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், பிஎல்ஏ2, பிடிஏ, பிஎல்சி மற்றும் திமுகவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கிரகாம் பெல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி செல்லும் முதல்வருக்கு பணகுடியில் சிறப்பான வரவேற்பு
- கன்னியாகுமாரி
- அரிசி
- மாநில செயலாளர்
- நெல்லா
- கிழக்கு மாவட்டம்
- கிரஹாம் பெல்
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- கன்னியாகுமரி மாவட்டம்
- கே
- ஸ்டாலின் துகுடி விமான நிலையம்
- நெல் மாவட்டம்
